Friday, April 4, 2008




உன்னை வந்து சேர்கிறதா
இங்கு நான்
காற்றில் கொடுக்கும் கணக்கில்லாத முத்தங்கள் ..

அறிகிறாயா உன்னை உணரும் போதெல்லாம்
மலர்ந்திடும் என் புன்னகையை ..

கணிக்கமுடிகிறதா இந்த
குளிர்காற்றில் தேவைப்படும் உன்
கதகதப்பு...

கேட்கிறதா காலையில் எழுந்ததும்
கண் திறக்காமல் கையசைத்து
மெல்ல உன்னை அழைப்பது ..

தெரிந்திருக்கிறதா அவ்வப்போது
நான் தனியாக உளறிக்கொள்ளும்
சிணுங்கல்கள்..

அனுபவிக்கிறாயா உன் நினைவுகளால்
தூக்கமில்லாமல் புரளும்
என் நீண்ட இரவுகள்...

உணரமுடிகிறதா அவ்வப்போது
உருண்டோடும் என்
கண்ணீர் துளிகளின் ஈரம்.. .

புரிந்திருக்கிறதா உன் பிரிவு
ஏற்படுத்தும் என் உயிரின் வலி ..


LinkWithin

Related Posts with Thumbnails