Thursday, June 27, 2013

கடவுளாத‌ல்




எல்லாப் பாவங்களும்
மன்னிக்கப்படுகின்றன
கசிந்தொழுகும் குருதியில்
கழுவப்பட்டப்பின்

விளைவிக்கப்படும் ஒவ்வொரு
மரணங்களிலும்
உயிர்த்தெழுத‌ல்
நிக‌ழ்ந்து விடுகிற‌து மூன்றாம் நாளில்

பெண்மையின் சிதைக்கப்பட்ட‌
மிச்ச‌ங்க‌ள் சிதில‌ங்க‌ளென‌
புதைக்க‌ப்படுகின்றன‌
வ‌ர‌லாறு ம‌றைத்த‌ ப‌க்க‌ங்க‌ளில்

வ‌ன்புண‌ர்வுகளுக்கு இடையிலான‌
ஒரிர‌வின் விடிய‌லில்
விசும்பலூடே புதைந்த‌ துளி ஈரம்
எந்நேர‌மும்
பிர‌வாகிக்கலாம்
ஊழிப்பெருவெள்ள‌மென‌

சூன்ய‌ம் வெறித்திருக்கும் கருவிழியில்
வ‌டிகிறது இவ்வுலகத்திற்கான
பெருங்க‌ருணை
இதோ
இன்னொருமுறையும்
கடவுளாத‌ல்
ச‌பையேறுகிற‌து

LinkWithin

Related Posts with Thumbnails