*************************(1)**************************
தனிமையுடனான
இனிவரும் பயணம்
கடுங்கனவுகளைப் போலவே
எளிதாய் இருக்கப்போவதில்லை…
ஏன் எதுவுமே பேசாமல் இருக்கிறாய்
என்ற உனது கேள்விக்கும்
மெளனத்தைத் தவிர என்னிடம்
பதில் எதுவும் இல்லை
வழக்கமான விடையளிப்புகள்
எவ்வளவோ பார்த்திருந்தும்
இன்னும் எட்டிப்பார்த்திராத
எனது ஒரு கண்ணீர்த்துளியின்
கனம் உணர்ந்தோ என்னவோ
கிளம்புகையில்
எனக்காய்
அதிர்ந்து அலர்கிறது
ரயில்...
*************************(2)**************************
பேசிக் கொண்டிருக்கலாம்
என்று சொன்ன
ஒரு ரயில் பயணத்தில்
அயற்சியில் தூங்கிவிட்ட
உன்னை
எழுப்ப மனமில்லாமல்
ஏக்கத்துடன்
பார்த்துக்கொண்டிருக்கும்
எனக்காய்
சத்தமிட்டு
எழுப்பப் பார்க்கிறது ரயில்...
******************************************************
