Monday, April 26, 2010

துளிர்ப்பிற்காய்..




துடிதுடித்து கொதித்து ஆவியாகி மறைந்த
அதிவெப்பப்பரப்பில் விழுந்த
ஒற்றை நீர்த்துளியைப் போல
எந்த வெளியில் காணாமல் போனதென
வானம் வெறித்திருந்து
யுகங்களாய் கடந்த பொழுதுகளின்
கண்ணயர்ந்த ஒர் எதிர்பாரா கணத்தில்
எங்கோ தனை எதிர்கடந்த
வாடைக்காற்றின் நேசம் புணர்ந்து
பெருமழையாய்ப் பெய்து
உயிர் நனைத்தது
மென்மனதின் ஆழம் ஒட்டியிருந்த
கடைசித்துளிக் காதல்...



26 comments:

தம்பி... said...

Nalla vanthu irukkunga...

theluck said...

Awesome....

KUTTI said...

கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள்.

Chitra said...

very nice! அசத்தல்! பாராட்டுக்கள்!

ராஜ சேகர் said...

வெயிலுக்கேற்ற மழையாகத்தான் மனம் நனைக்கிறது உங்கள் கவிதை..

கடைசி துளிக்கு பின்னும் காதல் ஊறுமா? இல்லை இன்னுமொரு பெருமழை வேண்டுமோ??

பத்மா said...

அழகா இருக்கு .காதல் அது தான் எத்தனை போதையான வார்த்தை .
அது இருக்கும் வரை எல்லாம் இருக்கும்
கவிதை சிறப்பா இருக்கு

Kaki said...

kavidai azhutiya ungaluku paratukal.

Tamil partudan nengal azhuthiya kavidaigaluku nanri.

Thekkikattan|தெகா said...

கார்காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பது கிடையாது, அது தன் இயல்பிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதாக சொல்லுகிறது இந்தக் கவிஜா எனக்கு... நல்ல பாசிடிவ் எனர்ஜி இருக்கு!

குட்டிப்பையா|Kutipaiya said...

தம்பி -
//Nalla vanthu irukkunga...//
ரொம்ப நன்றிங்க :)

திலக் - "awesome" - ஒரே வார்த்தையில் அழகாக - நன்றி :)

குட்டிப்பையா|Kutipaiya said...

MANO
//கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள்.//
நன்றி மனோ :)

Chitra
//very nice! அசத்தல்! பாராட்டுக்கள்!//
நன்றி சித்ரா.. எனர்ஜெடிக்’கா இருக்கு :) :)

Anonymous said...

உயிரை நனைக்க ஒரு துளி போதும் காதலுக்கு என்ற கடைசி வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு குட்டி...

மலர்நேசன் said...

மிக சிறந்த உவமைகள் .....விளங்குவதற்கு சில நாழிகைகள் கொண்டது என் சிற்றறிவு....

குட்டிப்பையா|Kutipaiya said...

ராஜசேகர்,

//கடைசி துளிக்கு பின்னும் காதல் ஊறுமா? இல்லை இன்னுமொரு பெருமழை வேண்டுமோ??//

காலம் தோறும் காதல் ஊறும்...ஊறிக்கொண்டு தானே இருக்கிறது..கடைசித் துளி தானே பெருமழையாய்ப் பெய்தது... மறுபடி மறுபடி ஒரு கடைசித்துளி..மீண்டும் மீண்டும் பெருமழை...

அடடா :) :)

கேள்விக்கு நன்றி ராஜ் :)



பத்மா - நன்றி..

//காதல் அது தான் எத்தனை போதையான வார்த்தை//

உண்மை உண்மை.. காதல் இல்லாமல் பல கவிதைகளே இல்லை தான் :) :)

குட்டிப்பையா|Kutipaiya said...

kaaki - உங்களுக்கும் நன்றி - படித்ததுக்காக :)

தெக்கி -
//நல்ல பாசிடிவ் எனர்ஜி இருக்கு!//
நெகடிவ்’வயும் பாசிடிவ்’ஆ மாத்திகிறது அப்பப்ப ரொம்ப தேவையான விஷயம் இல்லையா :) :)
கடைசித் துளினு வருத்தப்படாம கொஞ்சம் காத்திருக்கணும் :) :) :)
நன்றி..

குட்டிப்பையா|Kutipaiya said...

தமிழ் -

ஆமா.. மிக உண்மை - உயிர் நனைக்க ஒரு துளி.. நன்றி தமிழ், வருகைக்கும் கருத்துக்கும் :)

மலர்நேசன்
அவ்ளோ கஷ்டமாவா இருக்கு :) :) நன்றி..

Prasanna said...

the last drop of love will not dry out for sure.. It may perhaps bring more and more sudden downpours. Good one :)

Jerry Eshananda said...

பெருமழையில் உயிர் நனைந்து துளிர்க்கட்டும்......விருட்சமாய் வளரட்டும்,துளிர்ப்பிற்காய் யுகம் கடந்த பொழுதுகளை இனி என்றும் வசந்தம் நிரப்பட்டும்.

Ashok D said...

அழகு :)

சுபலலிதா said...

கவிதை ஆழமும் அழகும் நிறைந்ததாக உள்ளது அக்கா

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்குங்க.

குட்டிப்பையா|Kutipaiya said...

Prasanna

Thanks - that was a beautiful summary of this post in english :) :)

thank uu :)

குட்டிப்பையா|Kutipaiya said...

ஜெரி

அழகான தொடர்ச்சியாய்ப் பின்னூட்டம், நன்றி :)

அசோக், அழகு, நன்றி..

சுபா,

அழகா சொல்லியிருக்க, நன்றி டா..

பா.ரா,

மிக்க மகிழ்ச்சி, நன்றி :)

prince said...

:0 நல்லா இருக்குது !!

கமலேஷ் said...

அழகான வரிகள் மிக நன்றாக இருக்கிறது....

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

குட்டிப்பையா|Kutipaiya said...

kamalesh

romba nandri...

LinkWithin

Related Posts with Thumbnails