Sunday, June 22, 2008


எழுதப்படாத வெற்றுத் தாளாகவே
இருக்கிறது வெகுநாட்களாய் -
உனக்கான என் கடிதம்..
எந்த புள்ளியில் இருந்து தொடங்குவது
வார்த்தைகளில் விவரிக்க முடிந்த
உணர்வுகளை மட்டும்..
எத்தனை தருணங்களை
நினைவு கூர்வது உனக்கு
எடுத்து சொல்ல..
எத்தனை வார்த்தைகளைத்
தேடுவது என் நினைவுகளைப்
பதிவு செய்வதற்கு..
என் கனவுகளையும் புன்னகைகளையும்
கண்ணீரையும் எத்தகைய வாக்கியங்களில்
உணர்த்திவிட முடியும்...
ஒவ்வொரு வரிக்கான காரணங்களையும்
கதைகளையும் சொல்வதற்கே
ஒரோர் கடிதங்கள் தேவைப்படுமே..
எனினும்
வெற்றுத்தாளாகவே தான்
அனுப்பப்படுகிறது
முடிவில் - எழுதப்படாத உணர்வுகளும்
புரிந்துகொள்ளப்படும்
என்ற நம்பிக்கையோடு..

1 comment:

cheena (சீனா) said...

எழுதப்படாத உணர்வுகள் நிசயம் புரிந்து கொள்ளப்படும். அந்நாள் விரைவினைல் வர நல்வாழ்த்துகள் குட்டி பையா

LinkWithin

Related Posts with Thumbnails