Monday, August 4, 2008



என் அறைக்குள் மட்டும்
விரிந்து கிடக்கிறது என் வெளி..
வழிததடங்களே இல்லாத
பாதைகளில்
சென்று கொண்டிருக்கிறது
இலக்குகளற்ற என் பயணங்கள்..
முடிவில்லாத மணித்துளிகளாலாகி
நகர மறுக்கின்றன என் நீண்ட நாட்கள்..
கல்லறையின் வாயிலில் அமர்ந்து
வாழ்க்கையின் மீதியை
ஊடுருவிக்கொண்டிருக்கும்
என் எண்ணங்கள்..
மனந்திறந்த சிரிப்புகளின் ஊடே
இதயம் வலிக்க ரகசியமாய் உருளும்
என் கண்ணீர்த் துளி..
உறக்கங்கள் மறக்கப்பட்ட
பகலைப் போன்ற என் இரவுகள்..
இத்தனை முரண்பாடுகள் இருப்பினும்
உயிர் தின்று கொண்டிருக்கும் நோய்
உள்ளிருந்தும்
அறியாதிருப்பவனைப் போல்
சாதாரணமாக சென்றுகொண்டிருக்கும்
அன்றாட வாழ்க்கை..


2 comments:

Jerry Eshananda said...

சத்தியமா சொல்லுங்க,"இது நீங்க எழுதுயது தானா?" உங்க வீடு அட்ரஸ் சொல்லுங்க,இப்பவே வந்து ஆட்டோ கிராப் வாங்கணும் போல இருக்கு.

cheena (சீனா) said...

முரண்பாடுகளுடன் வாழும் இயல்பான வாழ்க்கைதான் இன்றைய நிலை.

நன்று நன்று நல்வாழ்த்துகள் குட்டி பையா

LinkWithin

Related Posts with Thumbnails