
தினம் தினம் பல முறை
ஒலிக்கிறது என் வீட்டு அழைப்பு மணி ..
வாடகை வாங்க வரும் வாசல் பெருக்குபவர்...
குப்பை எடுத்து போக வரும் துப்புரவு பணியாளர்....
புதுப்புது கீரைகட்டுகள் இறக்கி வைக்கும் கீரைக்காரி...
விளம்பரங்களுடன் வரும் விற்பனையாளர்கள் ..
பிறந்தநாள் இனிப்பு கொடுக்கும் பக்கத்துக்கு வீட்டு குழந்தை ..
பேப்பர் கேட்கும் எதிர் வீட்டு தாத்தா...
கடிதங்கள் கொடுத்துப் போக வரும் புதுமுகங்கள்...
அன்னதானம் அன்பளிப்பு கேட்டு வரும் பக்தகோடிகள் ..
எப்போதாவது எட்டிப் பார்க்கும் சொந்த பந்தங்கள்...
ஒவ்வொரு முறையும் உன் முகம் எதிர்பார்த்து திறக்கும்
என் கதவுகள் ...
இருந்தும் வரவில்லை -
நீ
இன்று வரை ...
3 comments:
செமையா பின்னுதுப்பா கவிதை,சீக்கிரம் புத்தகம் போட்டா தான் சரிப்படும்.
வெகுவாய் ரசித்தேன்,உங்கள் நடையில் இது கொஞ்சம் வித்தியாசமாய் ,இயல்பாய் இருக்கிறது..[ஜன ரஞ்சகமாய் ]
வாசல் பெருக்குபவர் வாடகை வாங்கிகிறாரா - சரியாக இல்லையே
யாரையோ எதிர் பார்க்கும் போது மற்றவர்கள் அழைப்பு மணியினை அடிப்பது எரிச்சல் தரக்கூடிய இயல்பான நிகழ்வு
நல்ல் அகவிதை - ரசித்தேன் - நல்வாழ்த்துகள் குட்டி பையா
Post a Comment