
நீ இல்லாத எனது இந்த இரவுகளில்
என் மீது கால் போட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது தனிமை..
கலைந்து கிடந்த உன் உடைகளில்
ஞாபகமாய் நீ கொடுத்த புகைப்படத்தில்
கிறுக்கி வைத்திருந்த நாட்காட்டியில்
ஒன்று தொலைந்து மீதமிருந்த உன் ஒற்றைச் செருப்பில்
என திரும்பும் இடமெல்லாம் நின்று கொக்கரித்தது...
கசக்கி எரியப்பட்டு ஓரமாய்க் கிடந்த உன் உதடு ஒற்றிய
காகித கைக்குட்டையை எடுத்து பத்திரப்படுத்திய போது
கைக்கொட்டி சிரித்தது..
வழக்கமாய் நீ வரும் வழியில் உன்
காலடிப் பதிவுகளைத் தேட முயல்கையில்
கண்ணில் மண் தூவிய காற்றாய் வெறுப்பேற்றியது...
ஏதோ ஓர் இரவில்
கனவா மயக்கமா வகைப்படுத்த முடியா நிலையில்
உன் வாசனையை
மிக அருகில் உணர்ந்தது போல் இருக்க
தலையிலடித்தது போல நீ அருகில் இல்லாத உண்மை உரைத்ததில்
திடீரென தடம்புரண்டு
உடைந்து போய் அழ ஆரம்பித்த என்னை
பாவமாய் பார்த்துக்கொண்டிருந்த அந்த
நிமிடத்திலிருந்து தோழனாகி
துணையாகவும் இருக்கிறது
தனிமை - நீ
இல்லாமல் போன
இந்த நிமிடம் வரை...
6 comments:
Seetha... kalkaringa... the poem is beautiful.
Photo is very apt for this...
good one... Keep writting such nice ones :)
தனிமையோட விளையாடியிருக்கீங்க வார்த்தைகளிலும்....
excelnt!
நன்றி காக்கி,வசந்த் & பா.ரா..
akka kalakura...
அன்பின் குட்டி பையா
அருகில் இல்லாததை உணர்ந்த அந்த நொடி முதல் இல்லாமல் போன இந்த நிமிடம் வரை துணை இருப்பது தனிமை. என்ன கற்பனை வளம் - கவிதை அருமை.
நல்வாழ்த்துகள் குட்டி பையா
Post a Comment