தலைவலிகள் எப்போதும்
பெரிய தலைவலி தான்
ஒற்றைத் தலைவலி
அதனினும் கொடுமை
ஏன் தான் இப்படி வலித்துதொலைகிறது
கோபப்பட்டிருக்கிறேன் பலமுறை
நேற்று முதல்முறையாய்
நீ இருக்கும்போது வந்த
தலைவலியிடம் இன்னும் கோபம்
நீயோ
மெல்ல தைலம் தேய்த்தாய்
லேசாய் கை வைத்து
அழுத்தம் கொடுத்தாய்
மிக இதமாய் உன் கைச்சூட்டை
என் நெற்றிக்கு இடம் மாற்றினாய்
போர்வை போர்த்தி
தலை கோதினாய்
அருகிலேயே இருந்து
அரவணைப்பளித்தாய்
வலித்த இடத்தில்
இதமாய் ஒரு முத்தமும்
மாயமாய் மறைந்த
தலைவலியும்
சுகமாய் வந்த தூக்கமும்
சொல்லாமல்சொல்லிவிட்டு போனது
இத்தனை நாளாய்
தலைவலி வந்து வந்து போன
காரணத்தை!

11 comments:
தலைவலியில் இத்தனை சங்கதிகள் இருக்கா....ம்ம்ம் எங்களுக்கு எல்லாம் வொர்க் அவுட் ஆகுமா தெரியலையே குட்டி..
தலைவலிக்கு இப்படி ஒரு மருந்தா? சூப்பர்!
தலை வலி - இந்த சிறிய விஷயத்தை எவளவு அருமையாக கவதையாக வடிதிருகிறாய், மிக அருமை
காரணம் எதுவாயினும்
தீரா தலைவலி தீர்ந்ததுபோனது
ஒரு ஸ்பரிசத்தில்..
ஸ்பரிசித்தது யாரோ ??
அவருக்கு என்ன பெயரோ?
அதுவே அவளாயிருப்பின் ...
மற்றொரு தலைவலி
தலைதூக்கும் இங்கே..
ஆள அனுப்புங்க சீதா
குட்டிப்பையா....இனித்
தலைவலி வந்தா
உங்க ஞாபகம்தான் வரும்.
ஒற்றைத்தலைவலி,
இரட்டைத்தலைவலி,
காதல் தலைவலியோ !
nice
நல்லா இருக்கு
வலியை ரசிக்கும் மன நிலை காதலின் ஆகச் சிறந்த வரம் :)
ஒத்த தல்வளியையும் கவிதையாக்கி இருக்கீங்க ரொம்ப நல்ல இருக்குங்க...
வாழ்த்துக்கள் ...தொடருங்கள்..
சிறியதோர் புன்னகை
என் முகத்தில்,
உங்கள் கவிதையை
படித்ததில்...
மனதிற்கினியவர்களின் இருப்பே பல வாதைகளுக்கு அருமருந்து. உண்மை. வாஞ்சையுடன் வருடும் விரல்களுக்கு கட்டுப்பட்டு போகாத நோயும் உண்டோ!?
நல்ல கவிதை...
Post a Comment