Tuesday, October 12, 2010

கடைசித்துளி ஈரம்...



நிராகரித்து ஒதுக்கப்படும்
ஒவ்வொருமுறையும்
உருகி வழியும் உயிரை
உள்ளங்கையில்
அள்ளித் தொடர்கிறேன்
மேலும் உருகுதலை
அள்ள முடியாப் பாதரசத்துளியாய்
விரல்கள் வழி கசிந்து
உருண்டோடும் உயிர்த்துளிகள்
சேகரிக்க போதவில்லை
பலமோ மனமோ நேரமோ
போகட்டுமெனப் புறக்கணித்துப்
பின்வருகிறேன்
கண்கள் இருட்டி
காலடிகள் மங்கும்
ஒற்றையடிப் பாதையில்
உன் வாசனையின் தடம் ஒற்றி

கடைசித்துளி ஈரமும்
காயும் முன்னர்
சொல்ல ஆரம்பிக்கிறேன்
நம்பிக்கையின் கதையை
காதலின் வலிமையை
மெல்ல ஈனசுரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும்
குரலுக்கு இடையேயும்
நல்லதொரு முடிவுக்காய்
இன்னமும்
காத்திருக்கும் கடைசி
சில அணுக்களுக்கேனும்


21 comments:

R. Gopi said...

Eternal Optimism

தொடர்புடைய வேறொரு கவிதை (எங்கே படித்தேன் என்று நினைவில்லை)

நீ ஆம் என்று சொல்ல வேண்டாம்
நீ ஆம் என்று சொல்வாய் என்ற
நம்பிக்கை போதும். நான் அதைக்
கொண்டே உயிர் வாழ்ந்து விடுவேன்

R. Gopi said...

Where do you get the photos from? They are awesome. Do you shoot yourself?

theluck said...

மீண்டும் ஒரு அருமையான படைப்பு!

குட்டிப்பையா|Kutipaiya said...

@ Gopi - நன்றி! நண்பர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது தான்!! :) :)

@ திலக் - நன்றி :)

Chitra said...

படமும் கவிதையும் மனதை கவர்கிறது. அருமை.

Anonymous said...

உணர்ந்து எழுதப்பட்ட சத்தியமான உண்மை...சில இப்படியும் நம்மை தெளிவுபடுத்தும்..இரக்கம் இல்லா நெஞ்சத்திடம் ஈரம் சுரக்குமா?

Jerry Eshananda said...

ஈரத்தின் வாசம் வரிகளில் தெரிகிறது.முதல் பத்தி [பதினேழு வரிகள்] அனல் தெறிக்குது.

sathishsangkavi.blogspot.com said...

கவிதையும் படமும் கொள்ளை அழகு...

பவள சங்கரி said...

படமும் அருமை........கவிதையும் அருமை.......

vinu said...

முடிவுக்காய்
இன்னமும்
காத்திருக்கும் கடைசி
சில அணுக்கள்


- it's me:(

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//நிராகரித்து ஒதுக்கப்படும்
ஒவ்வொருமுறையும்
உருகி வழியும் உயிரை
உள்ளங்கையில்
அள்ளித் தொடர்கிறேன்//
Mm..Nice

ஜெயந்த் கிருஷ்ணா said...

அற்ப்புதமான வரிகளும் ... அழகான படமும்..

மோகன்ஜி said...

ரொம்ப அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

குட்டிப்பையா|Kutipaiya said...

@ சித்ரா - நன்றி :)

@ தமிழ் - //சில இப்படியும் நம்மை தெளிவுபடுத்தும்/ உண்மை உண்மை!!

@ ஜெரி - :) ஈரமும் அனலும் கலந்து இருக்கா, காதலை போலவே :P

குட்டிப்பையா|Kutipaiya said...

நன்றி சங்கவி ‍ வருகைக்கும் ரசனைக்கும் !

வாங்க நித்திலம் ‍, நன்றி, தொடர்ந்து வாங்க!

வினு ‍ ‍ ஏன் இவ்ளோ சோகம் :( ஒவ்வொரு கட்டத்துல அது எல்லாருக்குமே பொருந்தும் தான்..இதுவும் கடந்து போகும்..

Kaki said...

நம்பிக்கையின் கதையை
காதலின் வலிமையை
மெல்ல ஈனசுரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும்
குரலுக்கு இடையேயும்
நல்லதொரு முடிவுக்காய்
இன்னமும்
காத்திருக்கும் கடைசி
சில அணுக்களுக்கேனும்

--- The lines above are super...

Ungal Rasanai arumai... Kavingaruku thavaiyanadu

குட்டிப்பையா|Kutipaiya said...

நன்றி திரு!

வெறும்பய‍‍ - நன்றி !

வாங்க மோகன்ஜி - ‍ நன்றி...

bogan said...

அற்புதம் குட்டிப் பையா.ஒரு தலை ராகமா..

குட்டிப்பையா|Kutipaiya said...

காக்கி - நன்றி :) ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க! மகிழ்ச்சி..தொடர்ந்து வாங்க!

போகன் - :) ஹி ஹி.. அப்படியும் வைச்சுகலாம் :)

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...தொடர்ந்து வந்து உன்க கருத்துக்களைத் தெரிவிங்க...

Thanglish Payan said...

Superb ..

ஹேமா said...

அருமையான தெறிப்பு குட்டி.
தீபாவளி வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts with Thumbnails