Tuesday, November 16, 2010

காணாமல் போன ஒளிக்கணங்கள்




நிகழ்ந்துகொண்டிருக்கிறது
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய
நிதர்சனம் தினம்தினம்

என்றோ தொலைந்துபோயிருந்தது
எல்லா நிகழ்வுக்களுக்கான
நியாயமும்

எப்போதும் போலவே
எதிர்பார்த்திருந்தவைகள் அனைத்தும்
எதிர்பாராவிதமாய்

காலம் மாறத் தேய்ந்துகொண்டிருக்கும்
இழப்பின் வலி கூடுகிறது
மற்றொருமுறையும் கடக்க நேர்கையில்

கழிவிரக்கத்துக்கும் நம்பிக்கைக்குமான
இடைவெளியில் பெருக்கெடுக்கிறது
ஊழியின் வெள்ளம்

மெல்ல அனைத்துமாய்
ஆகிவிட்டிருக்கிறது
எங்கோ குமிழிட்டு
சூழ்ந்த வெறுமையின் இருள்


நன்றி கீற்று.காம்.

வெளியிட்ட தேதி : 09 நவம்பர் 2010.



14 comments:

Anonymous said...

//காலம் மாறத் தேய்ந்துகொண்டிருக்கும்
இழப்பின் வலி கூடுகிறது
மற்றொருமுறையும் கடக்க நேர்கையில்//

என் மனதை படித்துவிட்டு எழுதியது போல இருக்கு..ஆச்சிரியமாகவும் இருக்கு எப்படி சில நேரம் பலருக்கு ஒரே வித உணர்வு...உணர்ந்து கொண்டு இருப்பதால் வலியான தருணங்கள்..கவிதை அழகா இல்லை இந்த காதல் அழகா?

sathishsangkavi.blogspot.com said...

..கழிவிரக்கத்துக்கும் நம்பிக்கைக்குமான
இடைவெளியில் பெருக்கெடுக்கிறது
ஊழியின் வெள்ளம்

மெல்ல அனைத்துமாய்
ஆகிவிட்டிருக்கிறது
எங்கோ குமிழிட்டு
சூழ்ந்த வெறுமையின் இருள்..

மனதை நெருடிய கவிதை...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வெறுமையின் இருள் மெல்ல விலகும் நம்பிக்கையின் கீற்று உதிக்கும் போது

குட்டிப்பையா|Kutipaiya said...

//என் மனதை படித்துவிட்டு எழுதியது போல இருக்கு..ஆச்சிரியமாகவும் இருக்கு எப்படி சில நேரம் பலருக்கு ஒரே வித உணர்வு...உணர்ந்து கொண்டு இருப்பதால் வலியான தருணங்கள்..கவிதை அழகா இல்லை இந்த காதல் அழகா?//

நன்றி தமிழ்...முதல் பின்னூட்டமே உணர்வுபூர்வமாக...

வலி, ஏமாற்றம், காதல் எல்லாருக்கும் ஒண்ணு தான் போல. அழகானதும்.

குட்டிப்பையா|Kutipaiya said...

நன்றி சங்கவி... நெருடலின் ஒரு வித வெளிபாடு உணர்ந்துகொள்ளபட்டிருக்கிறது!

நன்றி திரு! உண்மை தான். நம்பிக்கையின் கீற்றுக்காக காத்திருப்போம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நிகழ்ந்துகொண்டிருக்கிறது
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய
நிதர்சனம்//

கிளி எடுத்துப்போட்டு சீட்டைப்போல இது எனக்கு எதுவோ சொல்கிறது.

Anonymous said...

சூப்பரா இருக்கு பாஸ்

ஜெயந்த் கிருஷ்ணா said...

nallaayirukku tholare..

குட்டிப்பையா|Kutipaiya said...

@ முத்து ‍ ‍நன்றி..
ஆமா.. எல்லாருக்கும் ஒரே சீட்டு :) :)


@ ச‌தீஷ் ‍ ந‌ன்றி ‍ முத‌ல் வ‌ருகைக்கும் பின்னூட்ட‌த்திற்கும்.

@ வெறும்ப‌ய‌ ‍ ந‌ன்றி

Jerry Eshananda said...

// ..கழிவிரக்கத்துக்கும் நம்பிக்கைக்குமான
இடைவெளியில் பெருக்கெடுக்கிறது
ஊழியின் வெள்ளம்//
ஒளிப்பிழம்பாய் வார்த்தைகள்...கவிதை ..கீற்றுவில் வேறு சிம்மாசன மிட்டு இருப்பதில் இன்னும் மகிழ்ச்சி.

Prabu M said...

//காலம் மாறத் தேய்ந்துகொண்டிருக்கும்
இழப்பின் வலி கூடுகிறது
மற்றொருமுறையும் கடக்க நேர்கையில்//


க்ளாஸ் :)

குட்டிப்பையா|Kutipaiya said...

@ ஜெரி - நன்றீ :)

@ பிரபு - நன்றி!!

ஹேமா said...

குட்டி...இன்றுதான் கீற்றில் பார்த்தேன்.வாழ்த்துகள்.அதன்பிறகுதான் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.

உங்கள் லேபிள் சொல்லும் அத்தனையுமே வலியின் உச்சம்.உணர்வுகள் ஒத்திருப்பதால்தானோ என்னவோ வரிகளையும் ரசிக்கிறேன்.வலிகள் குறைய தொடர்ந்தும் எழுதுங்கள் தோழி !

குட்டிப்பையா|Kutipaiya said...

//உணர்வுகள் ஒத்திருப்பதால்தானோ என்னவோ வரிகளையும் ரசிக்கிறேன்//

ஹேமா - மிக உண்மை. முரண் இருந்தால் ரசிக்க முடியுமா எனபது கேள்விக்குறி தான்.

மிக நன்றி தோழி.

LinkWithin

Related Posts with Thumbnails