எனக்கு மட்டும்
ஏன் இப்படி
எனக்கேட்டுக்கொள்ள
எல்லாருக்குமே
ஏதோ ஒன்று
நடந்துகொண்டு தான்
இருக்கிறது
—0—0—0—0—0—
எல்லைகளில்லாமல்
விரியும் என் வெளி
முடிந்துகொண்டிருக்கிறது
தொடங்குவதற்கு
முன்பாகவே
—0—0—0—0—0—
சபை நாகரிகத்திற்காய்
உதிர்க்கப்படும்
சிரிப்புகளில்
உதிர்ந்து விழாமல்
ஒளிகின்றன
செயற்கை முத்துக்கள்
—0—0—0—0—0—
மிகச்சிக்கலாய்
நீண்டு வளைந்துநெளிந்து
செல்லும் பாதை
நேராகிக்கொண்டிருக்கிறது
கடந்து செல்ல செல்ல
—0—0—0—0—0—
காரணமே இல்லையென
கூறப்படும்
மனவருத்தங்களுக்குப் பின்
உலகத்திற்கு
சொல்ல முடியாமல் போன
பல காரணங்கள்
புதைந்திருக்கின்றன
எப்பொழுதும்
—0—0—0—0—0—
விட்டுப் போன புள்ளி ஒன்று
தள்ளி நின்று
புரியாமல்
வேடிக்கை பார்க்கிறது
வைத்தவளை விட்டுவிட்டு
தன்னை முறைத்துக்கொண்டிருக்கும்
கோலத்தை
9 comments:
குட்டி...அத்தனையுமே ஒன்றுக்கொன்று போட்டி போடும் வாழ்வின் இயல்.அதுவும் கடைசிச் சிந்தனை எதிர்பாராத அசத்தல்.
சாரல் சிலிர்க்க வைக்கிறது தோழி !
காரணமே இல்லையென
கூறப்படும்
மனவருத்தங்களுக்குப் பின்
உலகத்திற்கு
சொல்ல முடியாமல் போன
பல காரணங்கள்
புதைந்திருக்கின்றன
எப்பொழுதும்
......உண்மைதான் போல..... எல்லா கவிதைகளும் அருமை.
ஒவ்வொரு கவிதையிம் உண்மையிம், எதார்த்தமும் பேசி வழி விட்டு நிற்கிறது காலத்தை கடந்து செல்ல :)
நேராகிக்கொண்டிருக்கிறது
கடந்து செல்லச்செல்ல :) எனக்கு இது பிடிச்சது ரொம்பவும். குட்டிபையா
அருமை..
அத்தனையும் அருமை. எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் கவிதை எழுத.
ஒரு பலத்தக் கைத்தட்டல் உங்களுக்கு...
மிக அழகான கவிதைகள்... வாழ்த்துக்கள்...
all good :)
நல்ல தொகுப்பு :)
Post a Comment