Wednesday, February 9, 2011

அநாவசியமாய் ஒரு கேள்வியும் பதிலும்





துண்டுப்பிரசுரங்கள்
விநியோகிப்பதைப் போல
கடந்து போவோரிடம்
ஏதாவது ஒன்றை
திணித்தே தீரவேண்டுமென்ற‌
ஆவல்கள் ஆச்சரியமளிப்பவை
இனம் புரியாதவை

விடைக‌ள் பெரும்பாலும்
அவ‌சிய‌மில்லை
கேட்ப‌து மிக‌ முக்கியம்
விடை என்னவாயிருக்குமென‌
தெரிந்திருந்தும்

எவ்வ‌ள‌வு சுல‌ப‌மாய்
வீச‌ப்ப‌டுகிற‌து
ஒவ்வொரு கேள்வியும்
குத‌ர்க்க‌மாய்
குறுகலாய் கூர்மையாய்
எகத்தாளமாய்

புன்ன‌கை
புற‌க்க‌ணிப்பு
ப‌தில் கேள்வி
மெள‌ன‌ம்
கோப‌ம்
எரிச்ச‌ல்
ம‌ரியாதைக்காய்
ஒரு வார்த்தை
என‌ ஏதேனும் ஒன்றினால்
எதிர்கொள்கிறேன்
சொல்லக்கூடிய
ப‌தில்களின் வரிசை
முறுவலுடன்
விரைந்து மறைய‌

எனினும்
அடுத்த‌வ‌ர் எல்லைக்கோட்டில்
நிற்கும் பிர‌க்ஞை அற்றிருக்கும்
உங்களிடம்
ஒருமுறையேனும்
சொல்ல‌ முயற்சிக்கிறேன்
என் மூக்கு நுனியை உர‌சாம‌ல்
கொஞ்ச‌ம் த‌ள்ளி நில்லுங்க‌ள் என‌

6 comments:

Anonymous said...

தனி மனித உரிமைகளில் தலையிடும் அறிவற்றோரைச் சாடுகிற இக்கவிதை அருமை! :)

Chitra said...

தெளிவான கருத்தை, பதிலாக சொல்லி விட்டீர்கள்.

அடுத்த‌வ‌ர் எல்லைக்கோட்டில்
நிற்கும் பிர‌க்ஞை அற்றிருக்கும்
உங்களிடம்
ஒருமுறையேனும்
சொல்ல‌ முயற்சிக்கிறேன்
என் மூக்கு நுனியை உர‌சாம‌ல்
கொஞ்ச‌ம் த‌ள்ளி நில்லுங்க‌ள் என‌

.... சூப்பர்!

சிந்தையின் சிதறல்கள் said...

கேள்வியும் நானே பதிலும் நானே என்பதுபோல் அமைந்துவிட்டது வாழ்த்துகள்

R. Gopi said...

\\துண்டுப்பிரசுரங்கள்
விநியோகிப்பதைப் போல
கடந்து போவோரிடம்
ஏதாவது ஒன்றை
திணித்தே தீரவேண்டுமென்ற‌
ஆவல்கள் ஆச்சரியமளிப்பவை
இனம் புரியாதவை\\

சூப்பர்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அவசியமில்லாதவைகளை அறிந்து கொள்வதில் மனிதர்களுக்கு சற்று கூடுதல் மகிழ்ச்சிதான்.

Pranavam Ravikumar said...

வாழ்த்துகள்!

LinkWithin

Related Posts with Thumbnails