வெறித்த விழிகளில்
தேங்கிய வலி மீறி
நோக்கும் வெளி முழுதும்
விரிகிறது
நிறைவேறாக் கனவுகள்
துளிர்த்த ஒரு
இரத்தத்துளிக்காய்
எழுந்த பதற்றம் பார்த்து
விரக்தியாய் சிரிக்கிறது
வெடித்து சிதறிய
சதைத்துணுக்கு ஒன்று
குவியும் பிணங்களில்
எரியும் ஜெலட்டின் குச்சிகளின்
மரண வாசம்
மெல்ல கடந்து செல்கிறது
புத்தரின் சிரிப்பை
ஆயுதங்கள் சட்டம் ஒழுங்கு
எல்லை அரசு இயந்திரம்
பதவி மோகம் இனவெறி
அனைத்தையும் பிளந்துவிழுங்கிவிட
யோசித்துக்கொண்டிருக்கிறாள்
பூமியன்னை
உறைந்த உதிரக்கறைகளில்
நிழலாடும்
புன்னகைக்கும் சிசுக்கள் மட்டும்
கடவுளிடம் காட்டும்
திசையெங்கும்
விடியலின் ஒளியில்
மலர்ந்திருக்கிறது
வெள்ளை வெள்ளையாய்ப்
பூக்கள்
தேங்கிய வலி மீறி
நோக்கும் வெளி முழுதும்
விரிகிறது
நிறைவேறாக் கனவுகள்
துளிர்த்த ஒரு
இரத்தத்துளிக்காய்
எழுந்த பதற்றம் பார்த்து
விரக்தியாய் சிரிக்கிறது
வெடித்து சிதறிய
சதைத்துணுக்கு ஒன்று
குவியும் பிணங்களில்
எரியும் ஜெலட்டின் குச்சிகளின்
மரண வாசம்
மெல்ல கடந்து செல்கிறது
புத்தரின் சிரிப்பை
ஆயுதங்கள் சட்டம் ஒழுங்கு
எல்லை அரசு இயந்திரம்
பதவி மோகம் இனவெறி
அனைத்தையும் பிளந்துவிழுங்கிவிட
யோசித்துக்கொண்டிருக்கிறாள்
பூமியன்னை
உறைந்த உதிரக்கறைகளில்
நிழலாடும்
புன்னகைக்கும் சிசுக்கள் மட்டும்
கடவுளிடம் காட்டும்
திசையெங்கும்
விடியலின் ஒளியில்
மலர்ந்திருக்கிறது
வெள்ளை வெள்ளையாய்ப்
பூக்கள்
3 comments:
அஞ்சலிகளும் வணக்கங்களும்.
வலிகள் சுமந்த வார்த்தைகள் கவிதையில் சிறப்பு
நல்ல கவிதை... உங்கள் கவிபணி தொடரட்டும்..
vaithee.co.cc
Post a Comment