Wednesday, August 17, 2011

அமீபாவின் கால்கள்



ம‌க‌ள் அறிவிய‌ல் உண்மைக‌ள்
ப‌டித்துக் கொண்டிருந்தாள்
அமீபா ஒர் செல் உயிரி
அமீபாவுக்கென்று த‌னி உருவ‌ம் இல்லை
அமீபாவுக்கு கால்க‌ள் கிடையாது
த‌ன் உருவ‌த்தின் நீட்சியாக‌
கால்க‌ள் போன்ற‌
பொய்க்காலிகளைக் கொண்டது
அம்மா கேட்டியா’வென‌
ஆச்ச‌ரியப்ப‌ட்டுக் கொண்டாள்

பின் த‌மிழ்ப்புத்தகத்தை எடுத்து
பெண் சுத‌ந்திர‌ம் ப‌ற்றிய பாடமொன்றை
ப‌டிக்க‌த் தொட‌ங்கினாள்

அதில் ஆர்வ‌ம் இல்லாம‌ல்
உல‌க‌ வ‌ரைப‌ட‌த்தை எடுத்துவைத்துக்கொண்டு
ஆராய்ந்தாள்
ஆப்பிரிக்காவில் அடிமைக‌ள் இருக்கின்ற‌ன‌ராமே
உண்மையா அம்மா என்றாள்

அமீபாவின் பொய்க்காலிக‌ளைப் போன்ற‌
பெண் சுத‌ந்திர‌த்தைப் பெற்ற அடிமைக‌ள்
எங்கேயும் உள்ள‌ன‌ர் என்றேன்
நிதானமாய் பாத்திரங்களைக் கவிழ்த்தபடி

போம்மா ஒண்ணும் புரிய‌லை
என‌ விளையாட‌ ஒடிவிட்டாள்
திரும்பி பார்த்தேன்
சும்மா உட்கார்ந்து செய்தித்தாள்
ப‌டித்துக்கொண்டிருந்த‌வ‌ரும்
ச‌ட்டையை மாட்டிக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தார்!



8 comments:

ரிஷபன் said...

அமீபா ஒர் செல் உயிரி
அமீபாவுக்கென்று த‌னி உருவ‌ம் இல்லை
அமீபாவுக்கு கால்க‌ள் கிடையாது
த‌ன் உருவ‌த்தின் நீட்சியாக‌
கால்க‌ள் போன்ற‌
பொய்க்காலிகளைக் கொண்டது

அமீபாவின் பொய்க்காலிக‌ளைப் போன்ற‌
பெண் சுத‌ந்திர‌த்தைப் பெற்ற அடிமைக‌ள்
எங்கேயும் உள்ள‌ன‌ர் என்றேன்
நிதானமாய் பாத்திரங்களைக் கவிழ்த்தபடி

சுரீலென்று சுடும் வரிகள்.

இல்லையென்று மறுக்க முடியாமல் இப்போதும் ஆங்காங்கே சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதால் இக்கவிதையை உறுத்தலுடன் படிக்க நேரிட்டது.

Unknown said...

ஆமீபவுடன் பெண்களை ஒப்பிட்டுள்ளீர்கள்.. அமீபாவிற்காவது சுதந்திரமாக நீந்துவதற்கான அனுமதி உண்டு :) பிடித்திருக்கிறது கவிதை .

மதுரை சரவணன் said...

//அமீபாவின் பொய்க்காலிக‌ளைப் போன்ற‌
பெண் சுத‌ந்திர‌த்தைப் பெற்ற அடிமைக‌ள்
எங்கேயும் உள்ள‌ன‌ர் என்றேன்
நிதானமாய் பாத்திரங்களைக் கவிழ்த்தபடி //

arumai..vaalththukkal

ramalingam said...

நல்ல கவிதை. இன்னொரு தலைப்பு. அம்மாவும் அப்பாவும் அமீபாவும்.

MADURAI NETBIRD said...

தலைப்பு பெண்ணியத்தில் அமீபா என்று கொடுங்கள். அருமை

Anonymous said...

sudanthiram vanthavudan tuunkivitome,seyvathelam maranthuthan pathuvitomea

Mamm said...
This comment has been removed by the author.
குட்டிப்பையா|Kutipaiya said...

https://vasagasalai.blogspot.com/2011/08/blog-post_25.html

https://vasagasalai.blogspot.com/2011/08/2.html

LinkWithin

Related Posts with Thumbnails